உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

142

இளங்குமரனார் தமிழ் வளம் 17

களவைக் கடிக, கடனாக் கொண்டே

305. முளரிமுக நாகமுளை யெயிறுழுது 'கீற அளவிறுயர் செய்வரிவண் மேன்னவர்க ணாளும் விளைவரிய மாதுயரம் வீழ்கதியு ளுய்க்கும் களவுகட னாகக் கடிந்திடுதல் சூதே.

-சீவகசிந்தாமணி 2870

களவு விழைவார் கடுநர குறுவார்

306. கிளருமெரி விடமெழுதல் விழுதல்முத லாய அளவிலரு ’நரகில்வரு நவைபலவு ‘மஞ்சின் உளமொழிமெய் நெறியொழுகி யுறுபொருள் சிதைக்குங் களவுவிழை வொழிதல்கட னாக்கனனி நன்றே.

கிளையும் புகழும் கெடுக்கும் களவே

5

307. பிளவுகெழு வெழுநரக மெரிகொளுவ ‘லீர்தல் இளையவுடல் தடிவொடுறு துயரம்விளை விக்கும் °கிளையறவு தருமரிய புகழினை யழிக்குங் களவுநனி விடுதலற மென்றுகரு தென்றான்.

களவு கருதின் வளைய வருத்தும்

-சாந்தி புராணம்

308. களவி னாகிய காரறி வுள்ளன்மின் விளைவில் வெவ்வினை 'வீவில் கதிகளுள் உளைய வுள்ளழித் தொன்றல வேதனை வளைய வாங்கி வருத்த முறுக்குமே.

1. கீழ.

4. மஞ்சி.

2. மன்னரத னாலும். 5. வீர்தல்.

3. நரகிலரு.

6. கிளைபழிவு.

7.வீறில்.(308) இப்பாடல் சூளாமணியிற் காணப்பெறவில்லை.

சூளாமணி