உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புறத்திரட்டு

ஓட விடாமல் உலைக்கும் களவே

309. பீடில் செய்திக ளாற்கள விற்பிறர் வீடில் பல்பொருள் கொண்ட பயனெனக்

கூடிக் காலொடு கைகளைப் பற்றிவைத் தோட லின்றி 'யுலையக் குறைக்குமே.

33. பொய்யாமை

143

வளையாபதி 31

(பொய் சொல்லாதிருத்தல். “பொய்யாவது உள்ளிடு இன்மை. அஃதாவது யானை உண்ட விளங்கனி போல்வது. அஃது இல்லாமை யோடு ஒக்கும்' - திருக். 183 நாகை. சொ. தண்ட.

66

“பொய் என்பது பொந்து எனப் பொருள்படும். அஃதாவது வெளியே ஒரு பொருள்போல் தோன்றி உள்ளே வெறும் புரையாய் இருப்பது; இங்ஙனமே ஒருவர் நினைவுஞ் சொல்லும் செயலும் ஆராய்ந்து காண்பார்க்கு உள்ளீடு இல்லாதனவாய்ப் புலப்படு மாயின் அவை பொய்யென்று சொல்லப்படும். உள்ளீடு இல்லாப் புரை பயன்படாமை போலப் பொய்யான நினைவு சொற் செயல் களும் பயன்படாமையே அன்றித் தீவினையையும் பயப்பனவாம்” திருவாசக விரிவுரை. மறைமலை. 65-6

இ. பெ.அ: நீதிக். 10

இ.சா.அ: திருக். 30. ப.பா.தி. 36. (வாய்மை) நாலடி. 12

(மெய்ம்மை))

வையகம் பெறினும் பொய்யுரை யாடேல்

2

310. தான்கெடினுந் தக்கார்கே டெண்ணற்க தன்னுடம்பின் ஊன்கெடினு முண்ணார்கைத் துண்ணற்க - வான்கவிந்த வையக மெல்லாம் பெறினு முரையற்க

பொய்யோ டிடைமிடைந்த சொல்.

1. யுலைக்குங்.

2. தம்முடம்பில்.

-நாலடியார் 80