உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

144

311.

இளங்குமரனார் தமிழ் வளம் 17

பொய்யுரை வாயால் மெய்யறம் தொலையும் இம்மை நலனழிக்கு மெச்சங் குறைபடுக்கும் அம்மை யருநரகத் தாழ்விக்கும் – மெய்ம்மை அறந்தேயும் பின்னு மலர்மகளை நீக்கும் மறந்தேயும் 'பொய்யுரைக்கும் வாய்.

புண்பா டகலப் பொய்யை நீக்குக

-சிறுபஞ்சமூலம்

312. பொய்யி னீங்குமின் 2பொய்யின்மை பூண்டுகொண் டைய மின்றி யறநெறி யாற்றுமின்

வைகல் வேகனை வந்துற 3லொன்றின்றிக் கௌவை யில்லுல கெய்துதல் கண்டதே.

பொய்யாற் கெடுதல் பொய்யிலை கடிக

313. கல்வி யின்மையும் கைப்பொருள் போகலும் நல்லில் செல்லல்க ளானலி வுண்மையும் பொய்யில் பொய்யொடு கூடுதற் காகுதல் ஐய மில்லை யதுகடிந் தோம்புமின்.

வளையாபதி 32, 33

பொய்யுரை வேண்டா; புறத்திடுக இன்னே

314. மெய்யுரை விளங்குமணி மேலுலக கோபுரங்கள் ஐயமிலை நின்றபுகழ் வையகத்து மன்னு மையல்விளை மாநரக கோபுரங்கள் கண்டீர் பொய்யுரையும் வேண்டா புறத்திடுமி னென்றான்.

-சீவகசிந்தாமணி 2863

கடுந்துயர் விலக்கக் களைந்திடுக பொய்ம்மை

315. மலங்கிமதி யின்றியயர் வெய்திமயல் கூர நலங்கியறி யாதுதுய ரெய்திநனி வாடும்

1. பொய்மொழிந்த. (311) இப்பாடல் பதிப்புக்களிற் காணப்பட வில்லை.

2. பொய்யன்மை.

3. லொன்றிலாக். (315) இப்பாடல் சீவகசிந்தாமணியிற் காணப் பெறவில்லை.