உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புறத்திரட்டு

விலங்குறு கடுந்துயர் விலங்குதல் விரும்பிற் புலன்கொள்வழி பொய்யுரை புறத்திடுமி னென்றான்.

145

-சீவகசிந்தாமணி

34. வெகுளாமை

(“சினத்தைச் செய்தற்குக் காரணம் ஒருவன்மாட்டு. உளதாய இடத்தும் அதனைச் செய்யாமை” - பரிமே.

இ.பெ.அ: திருக். 31. பழமொழி. 7.

இ.சா.அ: நாலடி. 7. (சினமின்மை) ப.பா.தி. 27 (சினம்)) முட்டிய பசுவை முட்டுவார் உளரோ?

316.

ஆய்ந்த வறிவின ரல்லாதார் புல்லுரைக்குக்

காய்ந்தெதிர் 'சொல்லுபவோ கற்றறிந்தார் - தீந்தேன் முசுக்குத்தி நக்கு மலைநாட தம்மைப்

பசுக்குத்திற் குத்துவா ரில்.

ஈமிதித் தேறக் காய்வார் எவரே?

317. மதித்திறப் பாரு மிறக்க மதியா மிதித்திறப் பாரு மிறக்க - மிதித்தேறி ஈயுந் தலைமே லிருத்தலா லஃதறிவார் காயுங் கதமின்மை நன்று.

கௌவிய நாயைக் கௌவினார் யாரே?

பழமொழி 57

318. கூர்த்துநாய் கௌவிக் கொளக்கண்டுந் தம்வாயாற் பேர்த்துநாய் கௌவினா ரீங்கில்லை - நீர்த்தன்றிக் கீழ்மக்கள் கீழாய சொல்லியக்காற் சொல்பவோ மேன்மக்கள் தம்வாயான் மீட்டு.

1. சொல்லுவரோ.