உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66

146

319.

இளங்குமரனார் தமிழ் வளம் 17

வேர்த்து வெகுளார் விழுமிய சான்றோர் சேர்த்து 'நிகரல்லார் நீரல்ல சொல்லியக்கால் வேர்த்து வெகுளார் விழுமியோர் - 2ஓர்த்ததனை உள்ளத்தா னுள்ளி யுரைத்துரா யூர்கேட்பத் துள்ளித்தூண் முட்டுமாங் கீழ்.

-நாலடியார் 61, 70, 64

அனைத்தும் சுற்றமாய் அறிந்தால் வெகுள்வரோ?

3

320. உழந்துழந்து கொண்ட வுடம்பினைக்கூற் றுண்ண இழந்திழந் தெங்கணுந் தோன்றிச் - சுழன்றுழன்ற சுற்றத்தா ரல்லாதா ரில்லையா னன்னெஞ்சே செற்றத்தாற் செய்வ ‘தெவன்.

நினைவால் விளைவவே நெஞ்சில் நோய்கள்

321. தன்னை யொருவ னிகழ்ந்துரைப்பிற் றானவனைப் பின்னை யுரையாப் 'பெருமையான் - முன்னை வினைப்பயனு மாயிற்றா °லென்றதன்கண் மெய்ம்மை நினைத்தொழிய 7நெஞ்சினோ யில்.

-

அறநெறிச்சாரம் 66, 86

வெகுள்வார்க் கெதுவும் விளங்கத் தோன்றா

8

322. கற்றார்முன் தோன்றா கழிவிரக்கங் காதலித்தொன் றுற்றார்முன் தோன்றா வுசாவுதல் - தெற்றென அல்ல புரிந்தார்க் கறந்தோன்றா வெல்லாம்

வெகுண்டார்முன் தோன்றா கெடும்.

-நான்மணிக்கடிகை 8

35. இன்னா செய்யாமை

(“தனக்கு இன்னாதவற்றைப் பிறர்க்குச் செய்யாமை" - மணக். “தனக்கு ஒரு பயன் நோக்கியாதல். செற்றம்பற்றியாதல், சோர் வானாதல் ஓர் உயிர்க்கு இன்னாதவற்றைச் செய்யாமை"

1. நிகரல்லர்.

2. ஆர்த்ததனை.

3. தோன்றச்.

5. பெருமையோன். 6. மென்றகன்கண். 7. நெஞ்சநோ.

4. 160IT. துரை. 8.வுறாமுதல்.

-

- பரிமே.