உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

331.

புறத்திரட்டு

கொல்லா வறத்தின் கொழுநிழலுட் பட்டடங்கும் எல்லா வறனு மியைந்து.

கொலையோ டொன்றிய குற்றம் நான்கு

அலைப்பான் 'பிறிதுயிரை யாக்கலுங் குற்றம் விலைப்பாலிற் கொண்டூன் மிசைதலுங் குற்றம் சொலற்பால வல்லாத சொல்லுதலுங் குற்றம் கொலைப்பாலுங் குற்றமே யாம்.

149

-பாரதம்

-நான்மணிக்கடிகை 26

அருநர கெய்த அவாவும் அறுவர்

332. கொன்றவன் குறைத்தவன் கொணர்ந்து விற்றவன்

2

ஒன்றிய பொருள்கொடுத் துவந்து கொண்டவன்

நன்றிது வென்றவன் நாவிற் பெய்தவன்

என்றிவ ரறுவரு நரக மெய்துவார்.

இராமாயணம்

உறுபெருந் துன்ப உயிர்க்கொலை வேண்டா 333. அறம்பெரிய கூறின் னலங்கலணி வேலோய் 3மறம்புரிய நெஞ்சம்வழி யாப்புகுதந் தீண்டிச் செறும்பெரிய தீவினைகள் ‘சென்றுகடி தோடி உறும்பெரிய துன்ப முயிர்க்கொலையும் வேண்டா. கொல்லுயிர் அழுகை சொல்லுவ தாரிடம்? 334. மங்கை மனாவனைய மென்சூல் மடவுடும்பு செங்கண் வரிவரால் செந்நீ ரிளவாளை

1. பிறவுயிரை. தெரியவில்லை.

வெங்கருனை புல்லுதற்கு வேறுவே றாக்குறைப்ப 5அங்காந்து நோக்குநோக் கார்கண்ணே நோக்குமே.

2. நன்றடு மடைமகன். (332) இஃது இராமாயணத் துள்ளதாகத் 3. மறம்புரிகொண்.

5. அங்காந் தழுகின்றதார் கண்ணே.

4. சென்றுகதி யோடி.

6. நோக்குமால்.