உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

339.

புறத்திரட்டு

கொலையை நீக்கலே கூறிய அறமாம்

கொலையி னீங்குமின் கொண்மி னுலகினுள் தலைவ னல்லறந் தக்க தெனவுவந்

தலையி னீங்கிய வவ்வுல கெய்துதல்

'முனைவர் சொன்ன 2முடிவிது வாகுமே.

37. செல்வ நிலையாமை

151

-சூளாமணி

(செல்வம், "இன்ப நுகர்ச்சிகளுக்குக் காரணமாகிய பொருள் களினுடைய ஈட்டம். இது யாவர்மாட்டும் ஒரு படிப்பட நில்லா தாகிய நிலையாமை கூறப்பட்டது. செல்வங்கொண்டு அறஞ் செய்ய வேண்டுதலின் எல்லாரிடத்தும் உளதாகிய செல்வங்கள் எவ்வாற்றானும் நில்லாமை காட்டி அறஞ்செய்வித்தல் கருத்தாதலின் என்றவாறு” -பதுமனார்.

இ.பெ.அ: நாலடி. 1. ப.பா.தி. 39.

இ.சா.அ; திருக். 34. ப.பா.தி. 37. நீதிக். 71. (நிலையாமை)) உயர்வும் தாழ்வும் உந்துதல் வினையால்

240. யானை யெருத்தம் பொலியக் குடைநிழற்கீழ்ச் சேனைத் தலைவராய்ச் சென்றோரும் - ஏனை வினையுவப்ப வேறாகி வீழ்வர்தாங் கொண்ட மனையாளை 'மாற்றார் கொள.

வழங்காப் பொருளோ வறிதே ஒழியும்

341. உண்ணா னொளிநிறா னோங்குபுகழ் செய்யான் துன்னருங் கேளிர் துயர்களையான் - கொன்னே வழங்கான் பொருள்காத் திருப்பானேல் அஆ இழந்தானென் றெண்ணப் படும்.

1. முனிவர்.

2. முடிவது.

3. மாற்றான்.