உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புறத்திரட்டு

இல்லதும் உள்ளதும் இசைப்பது கேடே

355. இல்லெனின் வாழ்க்கையு மில்லையுண் டாய்விடிற் கொல்வர் கயவர் கொளப்பட்டும் வீடுவர் இல்லையுண் டாய்விடி னிம்மை மறுமைக்கும் புல்லென்று காட்டும் புணர்வது மன்றே.

155

வளையாபதி 35, 33

எண்ணிக் கழிக்கும் இடர்மிகு நாட்கள்

356. பெற்றவை பெற்றுழி யருந்திப் பின்னரும் மற்றுமோ ரிடவயின் வயிறு தானிறைத் திற்றைநாள் 'கழித்தன மென்று கண்படூஉம் ஒற்றைமா மதிக்குடை யரசு முண்டரோ.

நேற்றும் இன்றும் நிலையிலா மாற்றம்

357. அரையது துகிலே மார்பின தாரம்

முடியது முருகுநாறுந் தொடையல் புடையன பால்வெண் கவரியின் கற்றை மேலது மாலை தாழ்ந்த மணிக்காற் றனிக்குடை முன்னது முரசுமுழங்கு தானை யிந்நிலை இனைய செல்வத் தீங்கிவர் யாரே தேவ ரல்ல ரிமைப்பதுஞ் செய்தனர் மாந்த ரேயென மயக்கம் நீங்கக்

களிற்றுமிசை வந்தனர் நெருந லின்றிவர் பசிப்பிணி காய்தலி னுணங்கித் துணியுடுத்து மாசுமீப் போர்த்த யாக்கையொடு

தாமே 'யொருசிறை யிருந்தனர் மன்னே.

-நாரதசரிதை

1. கழிந்தன, போக்கின.

2. யொருதனி.

-ஆசிரியமாலை