உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

362.

புறத்திரட்டு

தானமும் தவமும் தாழா தாற்றுக

முருந்தனைய தூமுறுவல் முற்றிழையார் சேரி இருந்திளமைக் கள்ளுண் டிடைதெரித லின்றிக் கருந்தலைகள் வெண்டலைக ளாய்க்கழியு முன்னே அருந்தவமுந் தானமும் 'ஆற்றுமின்கள் கண்டீர்.

அழகு மாட்சியும் அழிவு வீழ்ச்சியும்

363. மைதிரண்ட வார்குழல்மேல் வண்டார்ப்ப 2மல்லிகைநன் மாலை சூடிக்

கைதிரண்ட வேலேந்திக் காமன்போற் காரிகையார் மருளச் 3சென்றார்

ஐதிரண்டு கண்டங் குரைப்பவோர்

தண்டூன்றி ‘யறிவிற் றள்ளி நெய்திரண்டாற் போலுமிழ்ந்து நிற்கு

மிளமையோ நிலையா தேகாண்

157

-சீவகசிந்தாமணி 1574, 2619, 2626

அணுகி நின்றவர் அகல்வதும் என்னே!

364. இன்புகை யார்ந்த விழுதார்மென் பள்ளிமேல் அன்புருகு நல்லா ரவர்தோள்மேற் றுஞ்சினார் தம்புலன்கள் குன்றித் தளரத்தங் ‘காதலார் அன்புருகு கண்புதைத் தாங்ககல்வர் நெஞ்சே.

நீனிறம் ஏனோ பானிறம் ஆயது?

365. நீனிறங் கொண்ட வைம்பால் நிழல்மணி யுருவம் நீங்கிப் பானிறங் கொண்டு வெய்ய படாமுலை பையிற் 'றூங்கி வேனிற மழைக்கண் தாமு மிமைகுறைந் *தழுகி மேனி தானிறங் கரக்குங் காலந் தையலீர் மெய்ய தன்றே.

1. ஆற்றுமினே

2. மல்லிகைமென். 3. செல்வார்.

4. யறிவாற்றள்ளி.

5. காதலர்.

6. கொண்ட.

7. றூங்க.

8. தழுங்கி.