உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

158

366.

இளங்குமரனார் தமிழ் வளம் 17

ஊன்மரச் சோலைக் குறுபிணி செந்தீ

ஊன்சே ருடம்பென்னு மோங்கல் மரச்சோலை தான்சேர் பிணியென்னுஞ் செந்தீக் கொடிதங்கிக் கான்சேர் கவினென்னுங் காமர் மலர்வாடத் தேன்சேர் 'வரைமார்ப தீத்திட் டிறக்குமே.

-சீவகசிந்தாமணி 1576, 2940, 2797

நாற்ப திகக்க நரைத்தூ தெய்தும்

367. வேற்கண் மடவார் விழைவொழிய யாம்விழையக் கோற்கண் நெறிகாட்டக் கொல்கூற் றுழையதா நாற்ப திகந்தாம் நரைத்தூதும் வந்ததினி நீத்தல் துணிவாம் நிலையா திளமையே.

நினைக்க இரக்கம் நேரும் இளமை

368. இனிநினைந் திரக்க மாகின்று திணிமணற் செய்வுறு பாலைக்குக் கொய்பூத் தைஇத் தண்கய மாடு மகளிரொடு 3கைபிணைத்துத் தழுவுவழித் தழீஇத் தூங்குவழித் தூங்கி மறையென லறியா மாயமி லாயமோ டுயர்சினை மருதத் துறையுறத் தாழ்ந்து நீர்நணிப் ‘படிகோ டேறிச் சீர்மிகக் கரையவர் மருளத் திரையகம் பிதிர நெடுநீர்க் குட்டத்துத் துடுமெனப் பாய்ந்து குளித்துமணற் கொண்ட கல்லா விளமை யளிதோ தானே யாண்டுண்டு கொல்லோ தொடித்தலை விழுத்தண் டூன்றி நடுக்குற் றிருமிடை மிடைந்த சிலசொற் பெருமூ தாளரே மாகிய வெமக்கே.

வளையாபதி 40

-புறநானூறு 243

1. வரைமார்பன்.

2. மகாரொடு.

3. கைபிணைந்து.

4. படுகோ.