உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புறத்திரட்டு

இன்ப இளமை இரிந்ததும் யாண்டோ?

369. யாணர் வரவின் மேனா ளீங்கிவன் இளமைச் செவ்வி நயந்த பேதையர் காத லுண்கண் வருபனி நீங்கி

இன்னுந் துயில்கொண் டிலவே யின்றிவன் போர்வை பசையற வுணங்கிப் பாணர் பழந்தலைச் சீர்யாழ் போலக் குரலழிந்து

'நரம்புமடித் தியாத்த யாக்கை மூப்புறப் பதிகெழு மூதூர் மன்றத்துப்

பொதியிற் புறஞ்சிறைச் சார்ந்தனன் மன்னே.

39. யாக்கை நிலையாமை

159

-ஆசிரியமாலை

(யாக்கை என்பது உடல். அவ் “யாக்கை நிலையாமை அறிந்து அறத்தின் முயலும்படிக்கு அறிவுறுத்தியது” - தருமர்.

இ.பெ.அ: நாலடி. 3. ப.பா.தி.38.)

துஞ்சின ரல்லால் எஞ்சினார் எவரே?

370. மலைமிசைத் தோன்று மதியம்போல் யானைத் தலைமிசைக் கொண்ட குடையர் - நிலமிசைத் துஞ்சினா ரென்றெடுத்துத் தூற்றப்பட் டாரல்லால் எஞ்சினா ரிவ்வுலகத் தில்.

அன்றோ மணப்பறை இன்றோ பிணப்பறை!

371. மன்றங் கறங்க மணப்பறை யாயின

அன்றவர்க் கங்கே பிணப்பறையாப் - பின்றை ஒலித்தலு முண்டாமென் றுய்ந்துபோ மாறே வலிக்குமா மாண்டார் மனம்.

1. நரம்புமுடித்.