உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/185

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

168

இளங்குமரனார் தமிழ் வளம் 17

கீழது நீரகம் புகினு மேலது

விசும்பின் பிடர்த்தலை யேறினும் புடையது நேமி மால்வரைக் கப்புறம் புகினுங் கோள்வாய்த்துக் கொட்குங் கூற்றத்து மீளிக் கொடுநா விலக்குதற் கரிதே.

41. தூய்தன்மை

66

ஆசிரியமாலை

(தூயது அன்மை, தூய்தன்மை யாம். குடரும், மலமும், புழுக்களும். ‘(கிருமிகளும்)' முடை நாற்றங்களும் ‘(துர்க்கந்தங் களும்)' தோன்றாமல் மூடியிருந்த தோலின் புறத்தைக் கண்டு நன்றென்றும், தூயதென்றும் மயங்குவார்க்கு இது தூயது அல்லாமை அறியும்படி கூறுகின்றது. - பதுமனார்.

இ.பெ.அ: நாலடி. 5 (பாடவேறுபாடு) தூயதல்லாமை.) நொய்ய புக்கிலை நோக்கித் தெளிக

403. மாக்கேழ் மடநல்லா யென்றரற்றுஞ் சான்றவர் நோக்கார்கொல் நொய்யதோர் புக்கிலை - யாக்கைக்கோர் 'ஈச்சிற கன்னதோர் தோலறினும் வேண்டுமே

காக்கை கடிவதோர் கோல்.

புறங்கா டெவர்க்கும் புகட்டும் நீதி

404. முல்லை முகைமுறுவல் முத்தென் றிவைபிதற்றுங் கல்லாப்புன் மாக்கள் கவற்ற விடுவெனோ எல்லாருங் காணப் புறங்காட் டுதிர்ந்துக்க பல்லென்பு கண்டொழுகு வேன்.

இவற்றுள் எவளோ ஈர்ங்கோ தையாள்?

405. குடருங் கொழுவுங் குருதியு மென்புந் தொடரு நரம்பொடு தோலும் இடையிடையே

1. ஈஇச் சிறகன்ன.