உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/186

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புறத்திரட்டு

வைத்த தடியும் வழும்புமா மற்றிவற்றுள்

6

எத்திறத்தா ளீர்ங்கோதை யாள்.

169

-நாலடியார் 41, 45, 46

படைத்தவன் ஆற்றல் பகர்தற் கரிது

406.

என்பினை நரம்பிற் பின்னி

யுதிரந்தோய்த் திறைச்சி மெத்திப்

புன்புறந் தோலைப் போர்த்து

மயிர்புறம் பொலிய வேய்ந்திட்

டொன்பது வாயி லாக்கி

யூன்பயில் குரம்பை செய்தான்

மன்பெருந் 'தச்ச னல்லன்

மயங்கினார் மருள வென்றான்.

மைந்தரும் மகளிரும் மருவுதல் மாலையால்

407. மந்திர மருந்திவை யில்லை யாய்விடின் ஐந்தலை யரவினை யாவர் தீண்டுவார் சுந்தரச் சுரும்புசூழ் மாலை யில்லையேல் மைந்தரு மகளிர்த மருங்கு 4சார்கிலார்

காப்பியக் கவிகள் காட்டிய திறமை

408. உருவமென் றுரைத்தி யாயி

'னிறைந்ததோற் றுருத்தி தன்னைப்

புருவமுங் கண்ணு மூக்கும்

புலப்பட வெழுதி வைத்தாற்

கருதுவ தங்கொன் றுண்டோ

காப்பியக் கவிகள் காம

எரியெழ விகற்பித் திட்டா

°ரிறைச்சிப்போ ரிதனை யென்றான்.

1. தச்சன் வல்லன்

2. மகளிரை.

4. சாய்கலார்.

3. மருங்குல்.

5. னுறைந்ததோற். 6. ரிறைச்சிப்பே.