உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

170

இளங்குமரனார் தமிழ் வளம் 17

பூச்செனக் கூறல் பொய்யென லாமோ?

409. மெய்ப்படு சாத்தும் பூவு

மிகநனி கமழு மேனுங்

கைப்படு சாந்தும் பூவுங்

கொண்டலாற் கலக்க லாகா

'தைப்படு பித்து நெய்த்தோ

ரசும்புசோ ரழுகற் புன்றோல்

பொய்ப்பட வுரைத்த துண்டோ

பொன்னனீர் நம்மு ணாமால்.

-சீவகசிந்தாமணி 1577, 2936, 1585, 2938

என்றும் நறுமணம் இயைந்ததோ இவ்வுடல்?

410. நன்கன நாறுமி தென்றிவ்

வுடம்பு நயக்கின்ற தாயின்

ஒன்பது வாயில்க டோறு

முண்ணின் றழுக்குச் சொரியத்

தின்பதொர் நாயுமி ழுப்பத்

திசைதொறுஞ் 'சீப்பில்கு போழ்தின்

இன்பநன் னாற்றமி தன்க

ணெவ்வகை யாற்கொள்ள லாமே.

இத்தசை மாண்புதான் எத்துணை நாட்கு?

411. மாறுகொள் மந்தர மென்று

மரகத வீங்கெழு வென்றுந்

தேறிடத் தோள்க டிறத்தே

திறத்துளிக் காமுற்ற தாயிற்

பாறொடு நாய்க 3ளிசிப்பப்

பறிப்பறிப் பற்றிய போழ்தின் ஏறிய வித்தசை தன்மாட்

டின்புற லாவதிங் கென்னோ.

1. வைப்படு.

2. சீழ்ப்பில்கு.

3. ளசிப்பப்.