உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

174

இளங்குமரனார் தமிழ் வளம் 17

தானம் செய்க தவமும் புரிக

424. தானஞ் செய்திலந் தவமு மன்னதே கானந் தோய்நில விற்கழி வெய்தினம்

'நானந் தோய்குழல் நமக்குய்த லுண்டோ

2மானந்தீர் கொள்கையார் மாற்றம்பொய் யல்லவால்.

வளையாபதி 42, 44

இன்னாத் துன்பம் எவரே இல்லார்?

425. அருந்திய குறையிற் றுன்ப

மாங்கவை நிறையிற் றுன்பம்

பொருந்துநோய் பொறுத்தல் துன்பம்

3பொருந்திய போகத் துன்பம்

மருந்தினுக் குஞற்றல் துன்ப

மற்றவை யருந்தல் துன்பம்

இருந்தவா றிருத்தல் துன்பம்

யார்கொலோ துன்ப மில்லார்.

வாழ்கின்றார் என்கிறார் வீழ்கின்றார் மெய்யதாம்!

426. வாழ்கின்றார் மக்களுநம் வழிநின்றா ரெனவுள்ளந் தாழ்கின்றா தாழ்கில்லார் தமநில்லா வானக்கால் ஆழ்கின்ற குழிநோக்கி யாதார மொன்றின்றி வீழ்கின்றார் மெய்யதா மெய்தாங்க வல்லரோ.

சுற்றமு உறவும் சூழ்ந்து தடுக்கும்

427. அதளெறிந் தன்ன நெடுவெண் களரின் ஒருவ “னாட்டும் புல்வாய் போல

ஓடி யுய்தலும் கூடுமன்

ஒக்கல் வாழ்க்கை தட்குமா காலே.

-நாரத சரிதை

-புறநானூறு 193.

1. நானந்தோய் கூந்தலாய் நமக்கெய்த.

2. மானந்தீர்ந்தவர்.

3. பொருந்தியே போகத் தக்க.

4. னோட்டும்.