உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/193

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

176

431.

இளங்குமரனார் தமிழ் வளம் 17

பற்பல வில்லாப் பான்மைத் துறக்கம் பொய்யில் புலவர் புரிந்துறை மேலுலகம் ஐயமொன் றின்றி யறிந்துரைப்பின் - வெய்ய பகலின் றிரவின்று பற்றின்று துற்றின் றிகலின் றிளிவரவு மின்று.

ஐயைந் தாயும் அறிவே அறிவு

432. ஆமினி மூப்பு மகன்ற திளமையுந் தாமினி நோயுந் 'தலைப்படும் - யாமினி மெய்யைந்து மீதூர வைகாது மேல்வந்த ஐயைந்து ‘மாயவ தறிவு.

433.

-புறப்பொருள் வெண்பாமாலை 272, 187

பால்போ லமைந்தார் மேலுல கெய்துவார்

இருளே யுலகத் தியற்கை 'யிருளறுக்குங் கைவிளக்கே கற்ற வறிவுடைமை கைவிளக்கின் நெய்யேதன் னெஞ்சத் தருளுடைமை நெய்பயந்த

பால்போ லொழுக்கத் தவரே பரிவிலா

5மேலுலக மெய்து பவர்.

-அறநெறிச்சாரம் 194

ஞான நன்னெறி நல்குதல் வீடு

434. இல்லியார் நல்லறமு மேனைத் துறவறமும் நல்லியலா னாடி யுரைக்குங்கால் - நல்லியற் றானத்தாற் போகந் தவத்தாற் சுவர்க்கமாம் ஞானத்தால் வீடாக நாட்டு.

-சிறுபஞ்சமூலம் 36

1. தலைவரும்.

5. மேலுலகெய்து.

2. வெஃகாது. 6. நல்லியலி.

3. மாய்த லறிவு.

4. இருளகற்றுங்.