உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/195

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

178

440.

இளங்குமரனார் தமிழ் வளம் 17

உரிய செய்கை வினைப்பயனை

யுண்ணு மெனவே 'யுணர்ந்தவனை

அரிய னென்ன மகிழாது

மெளிய னென்ன விகழாதும் இருசார் வினையுந் தெளிந்தாரே

யிறைவ னூலுந் தெளிந்தாரே.

இருவினை கழிக்க ஏற்றவை மூன்று

மெய்வகை தெரிதல் ஞானம்

விளங்கிய பொருள்க டம்மைப்

பொய்வகை யின்றித் தேறல்

காட்சியைம் பொறியும் வாட்டி

உய்வகை யுயிரைத் தேயா

தொழுகுத லொழுக்க மூன்றும்

இவ்வகை நிறைந்த போழ்தே

யிருவினை கழியு மன்றே.

துன்பத் துயரில் துவள்வதே வாழ்வு

441. வேட்டன பெறாமை துன்பம்

3வீழ்நரைப் பிரிதல் துன்பம்

மோட்டெழி லிளமை ‘நீங்க

மூப்புவந் தடைதல் துன்பம்

ஏட்டெழுத் தறித லின்றி

யெள்ளற்பா டுள்ளிட் டெல்லாம்

சூட்டணிந் திலங்கும் வேலோய்

துன்பமே மாந்தர்க் கென்றான்.

-சீவகசிந்தாமணி 2815, 1436, 2799

மாயா இன்பம் மலர்ந்ததும் உண்டோ?

442. விண்ணி லின்பமும் வீதல் கேட்டுமால் மண்ணி லின்பமும் மாய்தல் காண்டுமால்

1. யுணர்ந்தவினை.

2. மென்றான்.

3. விழைநரைப்

4. நீங்கி