உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/196

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

179

-சாந்திபுராணம்

புறத்திரட்டு

எண்ணி லின்பமா மீறி லாததே

நண்ணி நாமினி நயக்கற் பாலதே.

இருவே றியல்பை இயற்றிய தென்னே!

443. ஓரில் நெய்தல் கறங்க வோரில் ஈர்ந்தண் முழவின் பாணி ததும்பப் புணர்ந்தோர் பூவணி யணியப் பிரிந்தோர் பைத லுண்கண் பனிவார் புறைப்பப் படைத்தோன் மன்றவப் பண்பி லாளன் இன்னா தம்மவிவ் வுலகம்

444.

இனிய காண்கித னியல்புணர்ந் தோரே.

வியத்தலும் இலமே! இகழ்தலும் இலமே!

யாது மூரே யாவருங் கேளிர்

தீதும் நன்றும் பிறர்தர வாரா

நோதலுந் தணிதலு மவற்றோ ரன்ன

சாதலும் 'புதுவ தன்றே வாழ்தல்

இனிதென மகிழ்ந்தன்று மிலமே முனிவின்

இன்னா தென்றலு மிலமே மின்னொடு வானந் தண்டுளி தலைஇ யானாது கல்பொரு திரங்கு மல்லற் பேர்யாற்று நீர்வழிப் படூஉம் புணைபோ லாருயிர் முறைவழிப் படூஉ 2மென்பது திறவோர் காட்சியிற் றெளிந்தன மாகலின் மாட்சியிற் பெரியோரை 3வியத்தலு மிலமே சிறியோரை ‘யிகழ்த லதனினு மிலமே.

1. புதுவதோ வன்றே.

3. மதித்தலு.

2. மென்பதைத் துறவோர்.

4. யிகத்த.

-புறநானூறு 194, 192.