உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/208

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புறத்திரட்டு

ஆளுதல் என்பது அரிது தவத்தினும்

489. மரந்தலை பிணங்கி வான்றோய்

மணிவளர் வயிரக் குன்றம்

உரந்தனக் குயர வேந்தி

யுய்த்திடு மொருவற் கேனும்

அருந்தவ மரசர் பார

மவைபொறை யரிது கண்டாய்

இரந்தவர்க் கீட்டப் பட்ட

விருநிதிக் கிழவ 'வென்றான்

எரியும் குளிரும் இணைந்து நிற்றல்

490. எரியு மணையாற் குளிரு மீகையாற் பெரியன் மாண்பினாற் சிறிய னேன்பினால் அரியன் வேந்தர்கட் கெளியன் மாந்தர்கட் குரிய னோங்குதற் கோடை யானையான். தனைவெல் வேந்தனைப் பினையெவர் வெல்வார் 491. தன்னை வென்றதண் டார்வய வேந்தனைப் பின்னை வென்றி பெறற்கரி தாகலான் மன்னி மற்றிவ னாண்டிடும் 3வையகம் பொன்னின் மாரி பொழிந்திடு கின்றதே.

191

-சூளாமணி 273, 594, 624

தண்ணளி ஈகை தாங்கிய ஒருவன்

492. தருமன் தண்ணளி யாற்றன தீகையால் வருணன் கூற்றுயிர் மாற்றலின் வாமனே அருமை யாலழ கிற்கணை யைந்துடைத் திரும கன்றிரு மாநில மன்னனே

உலகின் தந்தை ஒள்ளிய வேந்தன்

493. கோதை நித்திலஞ் சூழ்குளிர் வெண்குடை ஓத நீருல கொப்ப நிழற்றலால்

1. னென்றான்.

2. னண்பினால்.

3. வரைப்பகம்.

4. பொழிந்திட நின்றதே.