உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/209

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

192

494.

இளங்குமரனார் தமிழ் வளம் 17

தாதை யேயவன் தாணிழற் றங்கிய காத லாற்களிக் கின்றதிவ் வையமே.

-

சீவகசிந்தாமணி 160, 159

அறங்கொள் வேந்தன் பிறந்த மூர்த்தியாம்

இறந்த நற்குண மெய்தற கரியவாய்

உறைந்த தம்மையெல் லாமுட னாக்குவான் பிறந்த மூர்த்தியொத் தான்றிங்கள் வெண்குடை அறங்கொள் கோலண்ணல் மும்மத யானையான்.

கூற்றங் காயும் கோலவன் கொற்றவன்

495. சீற்றஞ் செற்றுப்போய் 'நீக்கிச்செங் கோலினாற் கூற்றங் காய்ந்து கொடுக்க வெணுந்துணை மாற்ற மேநவின் றான்றடு மாற்றத்துத்

தோற்றந் தன்னையுங் காமுறத் தோன்றினான்.

-குண்டலகேசி 15, 16

வல்லென இல்லெனச் சொல்லா வலியன்

496. வல்லென்ற சொல்லும் புகழ்வாய்மை வழீஇய சொல்லும் இல்லென்ற சொல்லு மிலனாகலின் யாவர் மாட்டுஞ் சொல்லுங் குறையின் மையிற் சோரரு மின்மையாலே கொல்லென்ற சொல்லு முரைகற்றிலன் கொற்ற வேலான். -நாரதசரிதை

“மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம்”

497. நெல்லு முயிரன்றே நீரு முயிரன்றே

1. நீங்கிச்செங்.

4. ரென்பதறிதல்.

மன்ன னுயிர்த்தே மலர்தலை யுலகம் அதனால், 3யானுயி “ரென்பதை யறிதல் வேன்மிகு தானை 'வேந்தற்குக் கடனே.

2. வெனுந்துணை. 3. யாமுயி. 5. வேந்தர்க்குக்.