உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புறத்திரட்டு

LO

5

புறத்திரட்டு அறத்துப்பால் பொருட்பால் என்னும் இரண்டு பால்களைத் தன்னகத்துக் கொண்டது. அறத்துப் பால் 45 அதிகாரங் களையும் 473 செய்யுட்களையும் உடையது. பொருட்பால் 86 அதிகாரங்களையும் 1033 செய்யுட்களையும் உடையது. இப்புறத் திரட்டுக்குச் சுருக்க நூல் ஒன்று தோன்றியது. அஃது அறத்துப்பால், பொருட்பால், காமத்துப் பால் என்னும் முப்பால்களை யுடைய தாயிற்று. காமத்துப் பாலில் 65 செய்யுட்கள் உள. அவையனைத்தும் முத்தொள்ளாயிரச் செய்யுட்கள்; பாட்டுடைத் தலைவனையே கிளவித் தலைவனாகக் கொண்ட புறப்பொருட் கைக்கிளையைச் சார்ந்தவை.

பால் பகுத்தலில் மட்டுமல்லாது அதிகாரம் பகுத்தலிலும் புறத்திரட்டு திருக்குறளையே நிலைக்களமாகக் கொண்டுள்ளது. திருக்குறளில் அறத்துப்பாலும் பொருட்பாலும் சேர்ந்து 108 அதிகாரங்கள் உள. புறத்திரட்டில் புறப்பொருள் பற்றிய வெட்சி முதல் வாழ்த்துப் பகுதி நீங்கிய அதிகாரங்கள் நூற்றெட்டே ஆகும். இந்நூற்றெட்டு அதிகாரங்களில் 14 அதிகாரப் பெயர்கள் மட்டுமே புறத்திரட்டில் இல்லை. எஞ்சிய அனைத்தும் குறளிலும் புறத் திரட்டிலும் ஒன்றாகவே அமைந்துள்ளன. ஆதலால் புறத்திரட்டுத் தொகை செய்த ஆசிரியர் குறள் அதிகாரங்களையும் பால்களையும் முன்னிறுத்தித் தம்பணி செய்தார் என்பது வெளிப்படை.

புறப்பொருள் பற்றிய அதிகாரங்கள் பன்னிரு படலத்தை மையமாகக் கொண்டு செய்யப் பெற்றவை.

66

வெட்சி நிரைகவர்தல் மீட்டல் கரந்தையாம்

வட்கார்மேற் செல்வது வஞ்சியாம் - உட்கா தெதிரூன்றல் காஞ்சி யெயில்காத்தல் நொச்சி அதுவளைத்த லாகும் உழிஞை - அதிரப்

பொருவது தும்பையாம் போர்க்களத்து மிக்கோர் செருவென் றதுவாகை யாம்”

என்பது ஒரு பழஞ்செய்யுள், இந்நெறியைப் போற்றி நிரைகவர்தல் முதலாக அதிகாரங்கள் அமைத்து வாழ்த்துடன் நூலை நிறைவு செய்துள்ளார். இவ்வகையால் புறத்தினை பற்றிய அதிகாரங் களாகப் பொருட்பாலில் அமைந்துள்ளவை இருபத்துமூன்றாம்.