உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6

இளங்குமரனார் தமிழ் வளம் 17

புறத்திரட்டில் தொகுக்கப்பெற்றுள்ள நூல்களை நான்கு

வகையாகப் பகுக்கலாம். அவை:

(1) முழுமையாக நமக்குக் கிடைத்துள்ள நூல்கள் (2) அரைகுறையாகக் கிடைத்துள்ள நூல்கள்

(3) உரையாசிரியர்களால் பெயரறிந்த நூல்கள்

(4) பெயரும் அறியப்பெறாத நூல்கள்.

அறநெறிச்சாரம், ஆசாரக்கோவை, இராமாயணம், இன்னா நாற்பது, இனியவைநாற்பது, ஏலாதி, களவழி நாற்பது, சீவக சிந்தாமணி, சூளாமணி, திரிகடுகம், நளவெண்பா,

நாலடியார், நான்மணிக்கடிகை, பழமொழி, புறநானூறு புறப்பொருள் வெண்பாமாலை, மேருமந்தர புராணம், யாப்பருங் கலம் என்னும் பதினெட்டு நூல்களும் முதல் வகையைச் சேர்ந்தவை. இந்நூல்களில் உள்ள பாடல்களில் பல, புறத்திரட்டால் திருத்தமும் தெளிவுமுள்ள நல்ல பாடங்களைப் பெற்றுள. அன்றியும் இராமா யணத்திற்கு ‘இராமாவதாரம்' என்னும் பெயருண்மை புறத் திரட்டால்தான் முதற்கண் அறிய வந்தது. நளவெண்பா ‘நளன் கதை’ என்னும் பெயரால் வழங்கப் பெற்ற தென்பதையும் இப் புறத் திரட்டால் அறிகிறோம்.

சிறுபஞ்சமூலம், பதிற்றுப்பத்து, பரிபாடல், பாரத வெண்பா ஆகிய நான்கு நூல்களும் இரண்டாம் வகையைச் சார்ந்தவை. இவற்றுள் சிறுபஞ்சமூலத்திற்குரிய மூன்று செய்யுட்கள் புறத் திரட்டால் கிடைத்துள. (புறத். 206, 207,311)

பதிற்றுப்பத்தின் முதற் பத்தும், இறுதிப் பத்தும், கிடைத்தில, எஞ்சிய எட்டுப் பத்துக்களே கிட்டின. ஆனால், புறத்திரட்டால் பதிற்றுப்பத்தைச் சேர்ந்த ஒரு முழுச்செய்யுள் கிட்டியுளது (1275). இளம்பூரணரால் தொல்காப்பிய உரையில் மேற்கோளாகக் காட்டப் பெற்ற பாடலின் மூன்று அடிகளைக் காட்டிப் பதிற்றுப்பத்தைச் சேர்ந்ததாக ஆசிரியர் நச்சினார்க்கினியர் குறித்தார். அப்பாடலை முழுமையாகக் காட்டிப் பதிற்றுப்பத்து என்றும் கூறுகிறது புறத் திரட்டு (1260)