உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புறத்திரட்டு

7

எழுபது பரிபாடல்களில் 24 பாடல்களே கிடைத்துள. எஞ்சிய பாடல்களைச் சேர்ந்த ஆறு உறுப்புக்களைப் புறத்திரட்டு வழங்கு கின்றது. அவையனைத்தும் மதுரை மாநகரைப் பற்றியவை (புறத். 866, 874, 875, 876, 877, 878).

பெருந்தேவனாரால் இயற்றப்பெற்ற பாரத வெண்பாவில் உத்தியோக பர்வத்திற்கும் யுத்த பர்வத்திற் பதின்மூன்று நாட் போர்களுக்குமுரிய பகுதிகளே கிடைத்துள்ளன. இப்பகுதியில் அமைந்த வெண்பாக்கள் 830ஆம். இப்புறத்திரட்டால் 32 வெண்பாக்கள் புதியனவாகக் கிடைத்துள.

இரும்பல் காஞ்சி, குண்டலகேசி, தகடூர் யாத்திரை, பெரும் பொருள் விளக்கம், முத்தொள்ளாயிரம், வளையாபதி என்னும் ஆறு நூல்களும் மூன்றாம் வகையைச் சார்ந்தவை. இந்நூற்களின் பெயர் களை உரையாசிரியர்கள் எடுத்தாள்வதோடு சிற்சில பாக்களையும் மேற்கோள் காட்டியுளர். ஆனால் புறத்திரட்டே மிகுதியான பாக்களை நமக்கு வழங்கியுள்ளது.

புறத்திரட்டால்

மொத்தம் நமக்குக் கிடைத்துள்ள பாடல்கள்

பெற்றுள்ள

பாடல்கள்

இரும்பல் காஞ்சி

5

3

குண்டலகேசி

19

19

தகடூர் யாத்திரை

48

44

முத்தொள்ளாயிரம்

110

புறத்திரட்டால்

44

புறத்திரட்டுச் சுருக்கத்தால்

65

ஆக

-

109

வளையாபதி

72

66

41

பெரும்பொருள் விளக்கம் 41

நான்காவது வகையைச் சேர்ந்த நூல்கள் ஆசிரியமாலை,

சாந்தி புராணம், நாரதசரிதை என்னும் மூன்றுமாம். இவற்றின்

பாடல்கள் அனைத்தும் புறத்திரட்டால் கிடைத்தனவே.