உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இளங்குமரனார் தமிழ் வளம் 17

கிடைத்துள்ள பாடல்கள்

8

நூல்

ஆசிரியமாலை

சாந்திபுராணம்

நாரதசரிதை

16

9

8

புறத்திரட்டு என்பது ஒரு தொகை நூல். அதனைப்பற்றி அறியும் நாம் தொகை நூல்கள் தோன்றிப் பெருகிய வரலாற்றைச் சுருங்கிய அளவிலேனும் அறிவது இன்றியமையாததாம்.

வழிநூல் வகையைக் கூறவந்த ஆசிரியர் தொல்காப்பியனார் ‘தொகுத்தல்' என்பதை முதற்கண் குறிப்பிட்டுள்ளார். “முதனூலுள் விரிந்ததனைச் சில்வாழ் நாட் சிற்றறிவின் மாக்கட்கு அறியத் தொகுத்துக் கூறல்” என்று உரை கூறிய பேராசிரியர் “படர்ந்துபட்ட பாருண்மையவாகிய மாபுராணம் பூதபுராணம் என்பன சில்வாழ்நாட் சிற்றறிவின் மாக்கட்கு உபகாரப்படாமையின் தொகுத்துச் செய்யப்பட்டு வழக்கு நூலாகிய தொல்காப்பியம் இடைச்சங்கம் முதலாக இன்றுகாறும உளதாயிற்றெனக் கொள்க என்று விளக்கம் எழுதியுள்ளார். இதனால் தொல்காப்பியம் ஒரு தொகை நூல் என்பது அவர் கருத்தாயிற்று. இனிப் பாயிரம் பாடிய பனம்பாரனார்க்கும் இதுவே கருத்தென்பது.

66

வழக்கஞ் செய்யுளும் ஆயிரு முதலின் எழுத்துஞ் சொல்லும் பொருளும் நாடிச் செந்தமிழ் இயற்கை சிவணிய நிலத்தொடு முந்துநூல் கண்டு முறைப்பட எண்ணிப் புலந்தொகுத் தோனே போக்கறு பனுவல்'

என்பதனால் புலப்படும்.

தொல்காப்பிய நெறியில் தோன்றிய நூல்கள் பாட்டும் தொகையும் என்னும் பதினெட்டும் பிறவுமாம். பாட்டு என்பது பத்துப்பாட்டையும் தொகை என்பது எட்டுத்தொகையையும் குறிப்பது தமிழுலகு நன்கு அறிந்ததே. பாட்டு தொகை என்று சுட்டும் வழக்கு உரையாசிரியர்கள் காலத்திற்கு முற்பட்டே உண்ட யிருந்தது என்பது அவர்கள் உரையால் நன்கு புலப்படுகின்றது.