உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66

புறத்திரட்டு

66

9

99

"மாயோன் மேய" என்னும் நூற்பாவின்கண் 'தொகை களிலும் கீழ்க்கணக்குகளிலும் இம்முறை மயங்கிவரக் கோத்தவாறு காண்க” என்றும் “கொடுப்போரேத்தி” என்னும் நூற்பாவின்கண் 'தத்தம் புதுநூல் வழிகளால் புறநானூற்றிற்குத்துறை கூறினாரேனும் அகத்தியமுந் தொல்காப்பியமுமே தொகைகளுக்கு நூலாகலின் அவர் சூத்திரப் பொருளாகத் துறை கூற வேண்டுமென்றுணர்க' என்றும் ஆசிரியர் நச்சினார்க்கினியர் கூறுவதாலும், "ஐவகை அடியும்” என்னும் நூற்பாவின்கண் “ஆசிரிய அடி முந்நூற்றறுபத்து நான்கும் பாட்டினுந் தொகையினும் வருமாறு கண்டு கொள்க என்றும், “மரபேதானும்” என்னும் நூற்பாவின்கண், “அதோளி இதோளி உதோளி எனவுங் குயின் எனவும் இவை ஒரு காலத்துள் க வாகி இக்காலத்திலவாயின. அவை முற்காலத்துள வென்பதே கொண்டு வீழ்ந்த காலத்துஞ்” செய்யுட் செய்யப்படா. அவை ஆசிரியர் நூல் செய்த காலத்துளவாயினும் கடைச்சங்கத்தார் காலத்து வழக்கு வீழ்ந்தமையிற் பாட்டினுந் தொகையினும் அவற்றை நாட்டிக் கொண்டு செய்யுள் செய்திலர். அவற்றுக்கு இது மரபிலக்கண மாகலினென்பது. இனி, பாட்டினுந் தொகையினும் உள்ள சொல்லே மீட்டொரு காலத்துக் குரித்தன்றிப் போயினவும் உள" என்றும் பேராசிரியர் கூறுவதாலும் அவர்கள் காலத்திற்கு முன்னரே பாட்டு, தொகை, கீழ்க்கணக்கு என்னும் வழக்குண்மை அறியலாம்.

இனி உரையாசிரியர் இளம்பூரணர் காலத்திற்கு முன்னரே இவ் வழக்குண்மையை, “ஆசிரியப் பாட்டின்” என்னும் நூற்பாவின் கண் "பெரிய பாட்டு பத்துப்பாட்டினுள்ளும், சிலப்பதிகாரத் துள்ளும், மணிமேகலையுள்ளும் கண்டு கொள்க” என்று அவர் உரை விரிப்பதால் அறியலாம். இதே நூற்பாவில் “கூத்தராற்றுப் படை தலையளவிற்கு எல்லை, மதுரைக் காஞ்சியும், பட்டினப் பாலையும் ஒழிந்தபாட்டு ஏழும், பரிபாடலும் கலியும் ஒழிந்த தொகை ஆறும் இடையளவிற்கு எல்லை” என்று நச்சினார்க்கினியர் விளக்குதலால் பாட்டின் பெயர்களும், தொகையின் பெயர்களும் விளங்குதல் காண்க.

66

"முருகு பொருநாறு பாணிரண்டு முல்லை

பெருகு வளமதுரைக் காஞ்சி - மருவினிய