உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10

இளங்குமரனார் தமிழ் வளம் 17

கோலநெடு நல்வாடை கோல்குறிஞ்சி பட்டினப் பாலை கடாத்தொடும் பத்து”

என்னும் வெண்பாவால் பத்துப்பாட்டு இவை என்பதும்,

66

நற்றிணை நல்ல குறுந்தொகை யைங்குறுநூ றொத்த பதிற்றுப்பத் தோங்கு பரிபாடல்

கற்றறிந்தா ரேத்துங் கலியோ டகம்புறமென் றித்திறத்த எட்டுத் தொகை”

என்னும் வெண்பாவால் எட்டுத்தொகை இவை என்பதும் வெளிப்படும்.

பாட்டுந் தொகையும் பாடினோர் சங்க காலத்தவர். பாடப் பெற்றோரும் சங்க காலத்தவர். பெரும்பாலனவும் தனிப் பாடல்கள். தனி மலரினும் மாலையின் பயனும் எழிலும் மிகுதியல்லவா! அதனால் தனிப்பாடல்களைத் திரட்டித் தொகை யாக்கும் எண்ணம் புலவர்கள் உள்ளத்தில் எழுந்தது! ஊசி எவ்வளவு எளிதாகத் தொலைந்து போகிறது! ஆனால் நூலோடு இணைத்து வைத்தால் - அட்டையில் செறித்து வைத்தால் தொலையாதன்றே இவ் வெண்ணத்தைப் பட்டறிவு தூண்டியது - பாராண்ட பைந்தமிழ் வேந்தர்கள் பாங்கறிந்து கடனாற்றினர். தமிழ்த்தாய் பெற்றிருந்த தனி மலர்கள், தொடையல்கள் ஆகி அவட்கு எழிலூட்டின.

-

-

-

-

தனிப்பாடல்களைத் தொகைப்படுத்துவதும் எளிதோ? கை போனவாறு கட்டி வைப்பதோ? வரன்முறை வைப்பு முறை பாருத்தம் வேண்டாவோ? ஆம், பருப்பொருள்களை ஒரு நெறிப்படுத்தி வைப்பதே அரிதாயிருக்க, அரிதினும் அரிதாம் நுண்பொருளை ஒழுங்குபடுத்துவது எத்துணை அருஞ்செயல்?

பாட்டு தொகைகளை நோக்க அவற்றுள் மூவகைப்பாடல்கள் அமைந்திருத்தல் கண்கூடு. அவை, அகவற்பா, கலிப்பா, பரிபாடல் என்பவை. பாவகைப்படி தொகுத்தால் தொகையை மூன்றாக்கி விடலாம். அதற்குத்துணை நின்றவை கலிப்பாவும் பரிபாடலுமே. கலிப்பாவாகத் தேர்ந்து தொகுத்தவை 150 பாடல்கள். பரி பாடலாகத் தொகுத்தவை 70 பாடல்கள். இவற்றைத் தனித்தனி நூலாக்குதல் எளிதாயிற்று! கலிப்பா ஐம்பெரும் புலவர்களால் ஐந்திணை குறித்துப் பாடப்பெற்றவை. ஆகவே திணை வரிசையில் வரன்முறை செய்து கலித்தொகை என்னும் பெயர் சூட்டப்பெற்றது.