உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/224

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புறத்திரட்டு

பெரியாரைச் சேரின் சிறியரும் பெரியராம் 557. ஊரங் கணநீ ருரவுநீர்ச் சேர்ந்தக்காற் பேரும் பிறிதாகித் தீர்த்தமாம் ஓருங்

குலமாட்சி யில்லாருங் குன்றுபோல் நிற்பர் நலமாட்சி நல்லாரைச் சார்ந்து.

பெரியவர் கேண்மை பெரும்புகழ் சேர்க்கும்

558. ஒண்கதிர் 'வாண்மதியஞ் சேர்தலா லோங்கிய அங்கண் விசும்பின் முயலுந் தொழப்படூஉம் குன்றிய சீர்மைய ராயினுஞ் சீர்பெறுவர் குன்றன்னார் கேண்மை கொளின்.

559.

நீரும் பாலாம் பாலொடு கலந்தால்

3

பாலோ டளாயநீர் பாலாயி னல்லது நீராய் ‘நிறந்திரிந்து தோன்றாதாம் - தேரிற் சிறியார் சிறுமையுந் தோன்றாதாம் நல்ல பெரியார் பெருமையைச் சார்ந்து.

நற்சார் வுற்றார் தற்காப் புற்றார்

560. கொல்லை யிரும்புனத்துக் குற்றி யடைந்தபுல் ஒல்காவே யாகு முழவ ருழுபடைக்கு மெல்லியரே யாயினும் நற்சார்வு சார்ந்தார்மேற் செல்லாவாஞ் செற்றார் சினம்.

207

-நாலடியார் 175, 176, 177, 178

53. நன்கறிவுறுத்தல்

(நன்கு என்பது நலம் பயப்பது. நலம் பயப்பவற்றை

அறிவுறுத்திக் கூறுதல்.)

பெரியார் வாய்ச்சொல் பெற்றுப் போற்றுக

561. அறிமி னறநெறி அஞ்சுமின் கூற்றம்

பொறுமின் பிறர்கடுஞ்சொற் போற்றுமின் வஞ்சம்

1. வான்மதியஞ்

2. தொழப்படும்.

3. னல்லதை.

4. நிறந்தெரிந்து.