உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/226

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1. காத்துக்.

புறத்திரட்டு

அறிவர் சிறப்பிற்கெதிர் விரும்பல் அழிந்தோர் நிறுத்தலறம் பகர்தல் சிறியா ரினத்திற் சேர்வின்மை

சினங்கை விடுதல் செருக்கவித்தல் இறைவ னறத்து ளார்க்கெல்லா மினிய ராத லிதுதெளிவே.

புலவர் வாயுரை பொருந்தி வாழ்க

567. பால்வளை பரந்து மேயும்

படுகடல் வளாக மெல்லாம்

கோல்வளை யாமற் 'காத்துன் குடைநிழற் றுஞ்சல் நோக்கி நூல்விளைந் தனைய நுண்சொற் புலவரோ டறத்தை யோம்பின்

மேல்விளை யாத வின்பம்

வேந்தமற் றில்லை கண்டாய்.

209

-சீவகசிந்தாமணி 2816, 2906

நல்லவை செய்க; அல்லவை தவிர்க

568. பல்சான் றீரே பல்சான் றீரே

569.

3

கயல்முள் ளன்ன நரைமுதிர் திரைகவுட் பயனில் மூப்பிற் பல்சான் றீரே

கணிச்சிக் கூர்ம்படைக் கடுந்திற லொருவன்

பிணிக்குங் காலை யிரங்குவிர் மாதோ

நல்லவை செய்த லாற்றீ ராயினும்

அல்லவை செய்த லோம்புமின் அதுதான்

எல்லாரு முவப்ப தன்றியும்

நல்லாற்றுப் படூஉ 'நெறியுமா ரதுவே.

நன்மக வென்ன நாடு காக்க

எருமை யன்ன கருங்கல் லிடைதோ றானிற் பரக்கும் யானைய முன்பிற்

2. நல்லது;

3. அல்லது.

4. நெறியு மற்றதுவே.