உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/227

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

210

இளங்குமரனார் தமிழ் வளம் 17 கானக நாடனை நீயோ பெரும

நீயோராகலி னின்னொன்று மொழிவல்

அருளு மன்பு நீக்கி நீங்கா

நிரயங் கொள்வரோ டொன்றாது காவல்

குழவி கொள்பவரி னோம்புமதி

அளிதோ தானேயது பெறலருங் குரைத்தே.

புலவர் பாடும் புகழே வீடு

570. சேற்றுவளர் தாமரை பயந்த வொண்கேழ் நூற்றித ழலரி நிரைகண் டன்ன

வேற்றுமை யில்லா 'விழுத்திணைப் பிறந்து வீற்றிருந் தோரை யெண்ணுங் காலை உரையும் பாட்டு முடையோர் சிலரே மரயிலை போல மாய்ந்திசினோர் பலரே

புலவர் பாடும் புகழுடையோர் விசும்பின் வலவ னேவா வான வூர்தி

எய்துப வென்பதஞ் செய்வினை முடித்தெனக்

கேட்ப லெந்தை சேட்சென்னி நலங்கிள்ளி தேய்த லுண்மையும் பெருக லுண்மையும்

மாய்த லுண்மையும் பிறத்த லுண்மையும் அறியா தோரையு மறியக் காட்டித்

திங்கட் புத்தேள் திரிதரு முலகத்து வல்லா ராயினும் வல்லுந ராயினும் வருந்தி வந்தோர் மருங்கு நோக்கி அருள வல்லை யாகுமதி யருளிலர் கொடாஅமை வல்ல ராகுக

2கெடாஅத் துப்பினின் பகையெதிர்ந் தோரே.

பொதுநோக் கொழிக புலவர் மாட்டே

571. ஒருதிசை யொருவனை யுள்ளி நாற்றிசைப் பலரும் 3வருவர் பரிசில் மாக்கள் வரிசை யறிதலோ அரிதே பெரிதும்

1. விழுக்குடிப்.

2. கெடாத.

3.வரும்.