உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/228

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புறத்திரட்டு

ஈத லெளிதே மாவண் டோன்றல் 'அதுநற் கறிந்தனை யாயிற்

பொதுநோக் கொழிமதி புலவர் மாட்டே.

காட்சிக் கெளிமை கடனாக் கொள்க

572. நீயே, பிறரோம்புறு மறமன்னெயில்

ஓம்பாது கடந்தட்டவர்

முடிபுனைந்த பசும்பொன்னின் அடியொலியக் கழல்தைஇய

வல்லாளனை வயவேந்தே

யாமேநின், இகழ்பாடுவோ 3ரெருத்தடங்கப்

புகழ்பாடுவோர் பொலிவுதோன்ற

இன்றுகண் டாங்குக் காண்குவ மென்றும் இன்சொலெண் பதத்தை யாகுமதி பெரும ஒருபிடி படியுஞ் சீறிடம்

எழுகளிறு புரக்கு நாடுகிழ வோயே.

211

-புறநானூறு 195, 5, 27, 121, 40

54. சிற்றினஞ் சேராமை

("சிறியோர் கூட்டத்தோடு கூடாமை. சிறியோராவார் கயவரும் ஐங்குற்றவாளியரும் தன்னலக்காரரும் கல்வி நிரம் பாதவரும் உயர்ந்தோர் உண்டு என்பதை இல்லையென மறுப் போருமாவர்" - பாவாணர்.

இ. பெ.அ: திருக். 46. ப.பா.தி. 57. நீதிக். 29)

1. அதுநன்.

கூடார்கட் கூடல் குலச்சிதை வாக்கும்

573. மொய்சிதைக்கும் ஒற்றுமை யின்மை யொருவனைப் பொய்சிதைக்கும் பொன்போலு மேனியைப் பெய்த கலஞ்சிதைக்கும் பாலின் சுவையைக் குலஞ்சிதைக்கும் கூடார்கட் கூடி விடின்.

-நான்மணிக்கடிகை 21

2. பிறரோம்புற்ற மன்னெயில். 3. ரெருத்த மடங்கப்.