உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/230

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பரிமே.

1. படுப.

புறத்திரட்டு

இகழ்ச்சியும் புகழ்ச்சியும் இனத்தல் எய்தும்

579. மனத்தான் மறுவில ரேனுந்தாஞ் சேர்ந்த இனத்தான் இகழப் 'படுவர் - புனத்து வெறிகமழ் சந்தனமும் வேங்கையும் வேமே எறிபுனந் தீப்பட்டக் கால்.

நற்சார் வுற்றால் தீச்சார் பறுமே

580. அறியாப் பருவத் தடங்காரோ டொன்றி நெறியல்ல செய்தொழுகி யவ்வும் - நெறியறிந்து நற்சார்வு சாரக் கெடுமே வெயில்முறுகப் புற்பனிப் பற்றுவிட் டாங்கு.

581.

பிறப்பும் விருப்பாம் பண்புறு நண்பால்

இறப்ப நினையுங்கா லின்னா தெனினும் பிறப்பினை யாரு முனியார் - பிறப்பினுள் பண்பாற்று நெஞ்சத் தவர்களோ டெஞ்ஞான்றும் நண்பாற்றி நட்கப் பெறின்.

புணர்தல் இன்பமும் பிரிதல் இன்பமும்

582.

உணர வுணரு முணர்வுடை யாரைப்

புணரப் புணருமா மின்பம் - புணரின்

தெரியத் தெரியுந் தெரிவிலா தாரைப்

பிரியப் பிரியுமாம் நோய்.

213

-நாலடியார் 124, 187, 239, 180, 171, 174, 247

55. தெரிந்து செயல்வகை

(“தான் செய்யும் வினைகளை ஆராய்ந்து செய்யும் திறம்”

பெ.அ: திருக். 47

இ.சா.அ: பழமொழி. 18 (கருமம் முடித்தல்))

2. தெளிவிலா.