உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/233

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

216

இளங்குமரனார் தமிழ் வளம் 17 எரிதிகழ்ந் திலங்கு வேலோ

யெண்ணுவ 'தெண்ண மென்றான்.

நுண்ணிய ரோடு நூலறி வுறுக

592. ஒன்றுநன் றெனவுணர் வொருவன் கொள்ளுமேல் அன்றதென் றொருவனுக் கறிவு தோன்றுமால் நின்றதொன் றுண்டுகேள் நீதி நூலினோ டொன்றிநின் றவரொடு முணர்க வொட்டியே.

நூலறி வின்றேல் நுழைபொருள் இல்லை

593. 3மண்ணியல் வளாகங் காக்கு

மன்னரால் வணக்க லாகாப்

புண்ணிய நீர ரேனும்

புலவராற் புகலப் பட்ட

நுண்ணிய நூலி னன்றி

நுழைபொரு ளுணர்தல் செல்லா

தெண்ணிய துணர்ந்து செய்யுஞ்

சூழ்ச்சியு மில்லை யன்றே.

பகையும் நகையும் பார்த்துத் தெளிக

594.

பகைய லாதவ ரைப்பகை யாக்கலும்

நகையில் தீமனத் தாரைநண் பென்னலும்

முகையின் வேய்ந்ததொர் மொய்ம்மலர்க் கண்ணியாய் மிகையின் மற்றவை பின்னை 4வெதுப்புமே.

பறவைக் கெனினும் பகரேல் மறைவுரை

595. உள்ளுநின் றொலிபுறப் படாத தொண்சிறைப் புள்ளுமல் லாதவும் புகாத நீரது

வெள்ளிவெண் விளிம்பினால் விளங்கும் வேதிகை வள்ளல்தன் மந்திரச் சாலை வண்ணமே.

1. தென்னை யென்றான்.

2. றவருரையுலக மொட்டுமே.

3. LOGOOT 600flw.

4. வெதும்புமே.