உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/241

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

224

இளங்குமரனார் தமிழ் வளம் 17

அளக்குங் கருவி துளக்கிலா உள்ளம்

622. மக்களு மக்களல் லாரு மெனவிரண்டு குப்பைத்தே குண்டுநீர் வையகம் - மக்கள் அளக்குங் கருவிமற் றொண்பொரு ளொன்றோ துளக்குறு வெள்வளையார் தோள்.

-அறநெறிச்சாரம் 92

எவர்க்கும் இனியர் எவரும் இல்லை

623. அங்கொளி விசும்பிற் றோன்று

மந்திவா னகட்டுக் கொண்ட

திங்களங் குழவிப் பால்வாய்த்

'தீங்கதி ரமுத மாந்தித்

தங்கொளி விரிந்த வாம்பல்

தாமரை குவிந்த வாங்கே

2எங்குளா ருலகில் யார்க்கு

மொருவரா வினிய நீரார்.

-சூளாமணி 1031

60. தெரிந்து வினையாடல்

("வினைசெய்வாரும் அவரால் செய்யப்படும் வினையும் பலவாதலின் அவ்வவரால் செய்யப்படும் வினைகளை அறிந்து அவரை இட்டுச் செய்வித்தல்” - பரிப்.

இ.பெ.அ: திருக். 52.

இ.சா.அ: பழமொழி. 20 (தெரிந்து செய்தல்) நீதிக். 65 (வினைத்திறம்))

கற்றவன் சார்பில் கடமை விடுக

624. உற்றா னுறாஅ னெனவேண்டா வொண்பொருளைக் கற்றானை நோக்கியே *கைவிடுக்க - கற்றான் கிழவ னுரைகேட்குங் கேளா னெனினும்

இழவன் றெருதுண்ட வுப்பு.

1. தீங்கதிர் முறுவன்.

2. எங்குள ருலகுக் கெல்லா.

3. கைவிடுக.