உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/243

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

226

இளங்குமரனார் தமிழ் வளம் 17

தீயரைத் திருத்தத் தேர்ந்தவர் அரியர் 630. நாட்டிக் கொளப்பட்டார் நன்மை யிலராயிற் காட்டிக் களைது மெனவேண்டா - ஒட்டி 'இடம்படுத்த கண்ணா யிறக்குமை யாட்டை உடம்படுத்து வெளவுண்டா ரில்.

நுண்ணுணர் வாளன் எண்ணுவ முடிப்பான்

631. உழையிருந்து நுண்ணிய கூறிக் கருமம் புரையிருந்த வாறறியான் புக்கான் விளிதல் நிரையிருந்து மாண்ட வரங்கினுள் வாட்டுக் கரையிருந் தார்க்கெளிய போர்.

பயன்விழை வாரைப் பணியில் நிறுத்தேல்

632. கட்டுடைத் தாகக் கருமஞ் செயவைப்பிற் பட்டுண்டாங் கோடும் பரியாரை வையற்க

தொட்டாரை யொட்டாப் பொருளில்லை யில்லையேல் அட்டாரை யொட்டாக் கலம்.

தூய்மை இலாரைத் தொண்டிற் செலுத்தேல்

633. அகந்தூய்மை யில்லாரை யாற்றப் பெருக்கி இகந்துழி விட்டிருப்பி னஃதால் - இகந்து நினைந்து தெரியானாய் நீள்கயத்து ளாமை நனைந்துவா வென்று விடல்.

தக்க துதவித் தகுவினை முடிக்க

634. ஆணியாக் கொண்ட கருமம் பதிற்றாண்டும் பாணித்தே செய்ப வியங்கொள்ளிற் - காணி பயவாமைச் செய்வார்யார் தஞ்சாகா டேனும் 3உயவாமைச் சேறலோ வில்.

பழமொழி 170, 289, 174, 176, 173, 175, 168

1. இடம்பட்ட

2. வேள்வுண்டா. 3.உயவாமற்.