உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/244

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புறத்திரட்டு

சிறியரைக் கொண்டு செயற்படல் வீணே

635. உறுமக்க ளாகவொருவரை நாட்டிப்

பெறுமாற்ற மின்றிப் பெயர்த்தே யொழிதல் சிறுமைக் கமைந்ததோர் செய்கை யதுவே குறுமக்கள் காவு நடல்.

நிகழ்ந்ததை அறிந்து நேர்வது செய்க. 636. உழந்ததூஉம் பேணா 'ரொறுத்தமை கண்டும் விழைந்தார்போல் தீயவை பின்னருஞ் செய்தல் கழங்கண் முழவியம்புந் தண்கடற் சேர்ப்ப 2முழங்குறைப்பச் சாணீளு மாறு.

ஆற்றுவார் ஆற்றல் அறிவரோ பிறரே?

637. தந்தொழி லாற்றுந் தகைமையார் செய்வன வெந்தொழில ராய வெகுளிகட்குக் கூடுமோ மைந்திறை கொண்ட மலைமார்ப ஆகுமோ நந்துழுத வெல்லாங் கணக்கு.

ஆக்கவும் அழிக்கவும் வல்ல தரசு

638. வழிப்பட் டவரை வலியராச் செய்தார் அழிப்பினு மாக்கினு மாகும் - விழுத்தக்க பையமர் மாலைப் பணைத்தோளாய் பாத்தறிவென் மெல்லக் கவுட்கொண்ட நீர்.

கனிப்பலா வெட்டிக் காஞ்சிரை நடுவரோ?

639. ஊழாயி னாரைக் களைந்திட் டுதவாத

3

கீழாயி னாரைப் பெருக்குதல் - யாழ்போலுந்

தீஞ்சொல் மழலையாய் தேனார் பலாக்குறைத்துக் காஞ்சிரை நட்டு விடல்.

அறிஞரைத் தேடி ஆள்வினைக் கமைக்க

640. தெற்ற அறிவுடையார்க் கல்லாற் றிறனிலா முற்றலை நாடிக் கருமஞ் செயவையார் 2. முழங்குறையச். 3. காஞ்சுரை.

1. தொறுத்தமை.

227