உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/246

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புறத்திரட்டு

உளைய உரைப்பினும் உற்றார்வாய்க் கேட்க 644. உளைய வுரைத்து விடினு முறுதி

கிளைகள்வாய்க் கேட்பது நன்றே - விளைவயலுட் பூமிதித்துப் 'புட்கலாம் பொய்கைப் புனலூர தாய்மிதித்த வாகா முடம்.

அல்லல் அடையின் அகற்றுவர் கிளைஞர் 645. அல்ல லொருவர்க் கடைந்தக்கால் மற்றவர்க்கு நல்ல கிளைக ளெனப்படுவார் - நல்ல வினைமரபின் மற்றதனை நீக்கு மதுவே மனைமர மாய மருந்து.

இன்னாக் கிளைஞரும் இடரிற் பிரியார்

646. முன்னின்னா ராயினு மூடு மிடர்வந்தாற் பின்னின்னா ராகிப் பிரியா ரொருகுடியார் பொன்னாச் செயினும் புகாஅர் புனலூர துன்னினா ரல்லார் பிறர்.

உணவின் முதற்றே உயரிய அறங்கள்

647. சேர்ந்தா ரொருவரைச் சேர்ந்தொழுகப் பட்டவர் தீர்ந்தாராக் கொண்டு தெளியினுந் - தேர்ந்தவர்க்குச் செல்லாமை காணாக்காற் செல்லும்வா யென்னுண்டாம் எல்லாம்பொய் யட்டூணே வாய்.

உற்றார்க் குதவுநர் உறுகண் துடைப்பார்

648. கூஉய்க் கொடுப்பதொன் றில்லெனினுஞ் சார்ந்தார்க்குத் தூஉய்ப் பயின்றாரே துன்பந் துடைக்கிற்பார் வாய்ப்பத்தான் ?மாழ்கியக் கண்ணும் பெருங்குதிரை யாப்புள்வே றாகி விடும்.

அவையகத் திழித்தல் அழகிய தன்று

649. பல்கிளையுட் பார்த்துறா னாகி யொருவனை நல்குரவால் வேறாக நன்குணரான் - சொல்லின்

1. புட்குலாம்.

2. வாடியக்.

229