உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/247

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

230

இளங்குமரனார் தமிழ் வளம் 17

உரையுள் வளவியசொற் சொல்லா ததுபோல் நிரையுள்ளே யின்னா வரைவு.

பழமொழி 351,353, 350, 352, 349, 376, 68

உறுதுயர் அனைத்தும் உறவுமுன் கெடுமால்

650. வயாவும் வருத்தமு மீன்றக்கால் நோவுங் கவாஅன் மகற்கண்டு தாய்மறந் தாஅங் கசாஅத்தா னுற்ற வருத்த முசாஅத்தன் கேளிரைக் காணக் கெடும்.

நல்லாண் மகனின் நற்கடன்ஈது

651. அழல்மண்டு போழ்தி னடைந்தவர்கட் கெல்லாம் நிழல்மரம்போல் நேரொப்பத் தாங்கிப் - பழுமரம்பொற் பல்லார் பயன்றுய்ப்பத் தான்வருந்தி வாழ்வதே நல்லாண் மகற்குக் கடன்.

உப்பிலாக் கூழும் ஒப்பிலா அமுதாம்

652. பொற்கலத்துப் பெய்த புலியுகிர் வான்புழுக்கல் அக்காரம் பாலோ டமரார்கைத் துண்டலின் உப்பிலிப் புற்கை யுயிர்போற் கிளைஞர்மாட் டெக்கலத் தானும் இனிது.

கிளைகளைத் தாங்கிக் கெட்டவர் இல்லை

653. அடுக்கல் மலைநாட தற்சேர்ந் தவரை

எடுக்கல மென்னார் பெரியோர் - அடுத்தடுத்து வன்காய் 'பலாப்பல காய்ப்பினு மில்லையே தன்காப் பொறுக்கலாக் கொம்பு.

-நாலடியார் 201, 202, 206, 203

62. பொச்சாவாமை

(“மறவி இன்றி ஒழுகுதல். அது தனது சோர்வு பார்த்துப் பிறர் வஞ்சகஞ் செய்யும் இடங்களினும் அறம் பொருள் இன்பங்கள்

1. பலபல.