உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/259

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

242

இளங்குமரனார் தமிழ் வளம் 17

செற்றங்கொண் டாடுஞ் சிறுதொழும்பு மிம்மூவர்

ஒற்றா ளெனப்படு வார்.

ஒற்றினை ஒற்றி உண்மை அறிக

-திரிகடுகம் 85,55

693. ஒற்றினா னொற்றிப் பொருள்தெரிதல் முன்னினிதே முற்றான் தெரிந்து முறைசெய்தல் முன்னினிதே பற்றிலனாப் பல்லுயிர்க்கும் பாத்துற்றுப் பாங்கறிதல் வெற்றிவேல் வேந்தர்க் கினிது.

இனியவை நாற்பது 35

ஒற்றரை ஒற்றால் ஒற்றுதல் கொற்றமாம்

694. ஒற்றர் தங்களை யொற்றரி னாய்தலும் கற்ற மாந்தரைக் கண்ணெனக் கோடலுஞ் சுற்றஞ் சூழ்ந்து பெருக்கலுஞ் சூதரோ

கொற்றங் கொள்குறிக் கொற்றவற் கென்பவே.

68. ஊக்கமுடைமை

-சீவகசிந்தாமணி 1921

“மனம் மெலிதலின்றி வினைசெய்தற்கண்

கிளர்ச்சி

யுடையராதல்' - பரிமே.

இ. பெ.அ: திருக். 60.)

எண்ணிச் செய்தலே பெரியார்க் கியற்கை

695. இசையு மெனினு மிசையா தெனினும் வசைதீர வெண்ணுவர் சான்றோர் - விசையின் நரிமா வுளங்கிழித்த வம்பினிற் றீதோ அரிமாப் பிழைப்பெய்த கோல்.

-நாலடியார் 152