உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/260

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புறத்திரட்டு

தமக்குத் தாமே தக்க துணையாம்

696. எமக்குத் துணையாவார் 'யாவரென் றெண்ணித் தமக்குத் துணையாவார்த் தாந்தெரிதல் வேண்டா பிறர்க்குப் பிறர்செய்வ துண்டோமற் றில்லைத் தமக்கு மருத்துவர் தாம்.

அச்சம் உடையார்க் கரணம் இல்லை

697. வன்சார் புடைய ரெனினும் வலிபெய்து தஞ்சார் பிலாதாரைத் தேசூன்ற லாகுமோ மஞ்சுசூழ் சோலை மலைநாட யோர்கண்ணும் அஞ்சுவார்க் கில்லை யரண்.

திருவினும் நன்று திட்பமே யாகும்

698. அருவிலை மாண்கலனு மான்ற பொருளுந் திருவுடைய ராயின் திரிந்தும் வருமால்

பெருவரை நாட பிரிவின் றதனால்

திருவினுந் 'திட்பமே நன்று.

243

-பழமொழி 149, 285,33

ஆற்றலுடையார்க் கனைத்தும் அரணே

699.

ஊக்க முரண்மிகுதி யொன்றிய நற்சூழ்ச்சி ஆக்க மிவன்க ணகலாவால் - வீக்கம்

நகப்படா வென்றி நலமிகு தாராற்

ககப்படா வில்லை யரண்.

-புறப்பொருள் வெண்பாமாலை 100

உரனுடை யாளரை ஒன்றுக வென்றும்

700. விளைபதச் சீறிடம் நோக்கி வளைகதிர் வல்சி கொண்டளை மல்க வைக்கும் எலிமுயன் றனைய ராகி யுள்ளதம் வளன்வலி யுறுக்கு முளமி லாவரொ டியைந்த கேண்மை யில்லா கியரோ 2. யார்க்கானும். 3. திட்பம் பெறும்.

1. வேண்டுமென்.