உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/262

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புறத்திரட்டு

முடியுந் திறத்தால் முயற்சி செய்க

703. வீங்குதோட் செம்பியன் சீற்றம் விறல்விசும்பிற் றூங்கு மெயிலுந் தொலைத்தலான் - ஆங்கு

முடியுந் திறத்தான் முயல்கதாங் கூரம்

படியிழுப்பி னில்லை யரண்.

245

பழமொழி 153, 151, 155

-ட

தாழ்விலா முயற்சி வாழ்வினை ஊக்கும்

704. ஆடுகோ டாகி யதரிடை நின்றதூஉம்

காழ்கொண்ட கண்ணே களிறணைக்குங் கந்தாகும் வாழ்தலு மன்ன தகைத்தே யொருவன்றான் தாழ்வின்றித் தன்னைச் செயின்.

காற்றொழில் என்று கைவிடிற் கேடே

705. உறுபுலி யூனிரை யின்றி யொருநாட் சிறுதேரை பற்றியுந் தின்னும் - அறிவினாற் காற்றொழி லென்று கருதற்க கையினான் மேற்றொழிலு மாங்கே மிகும்.

ஆள்வினைப் பேற்றான் அமையும் குலச்சீர்

706. நல்ல குலமென்றுந் தீய குலமென்றும்

சொல்லள வல்லாற் பொருளில்லைத் தொல்சிறப்பின் ஒண்பொரு ளொன்றோ தவங்கல்வி யாள்வினை என்றிவற்றா னாகுங் குலம்.

ஆள்வினை யாளியால் அருங்கிளை வாழும்

707. கோளாற்றக் கொள்ளாக் குளத்தின்கீழ்ப் பைங்கூழ்போற் கேளீவ துண்டு கிளைகளோ துஞ்சுக

வாளாடு கூத்தியர் கண்போற் றடுமாறுந் தாளாளர்க் குண்டோ தவறு.