உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/265

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

248

இளங்குமரனார் தமிழ் வளம் 17 சொரிந்தவை தொகுத்து நோக்கிற்

றொடுகடல் வெள்ள மாற்றா

முரிந்தநம் பிறவி மேனாள்

முற்றிழை யின்னும் நோக்காய்

பரிந்தழு வதற்குப் பாவா

யடியிட்ட வாறு காண்டாய்.

இயற்கைச் சாவுக் கிடிந்தழு தென்பயன்?

716. மயற்கையிம் மக்கள் யோனிப்

பிறத்தலும் பிறந்து வந்தீங்

கியற்கையே பிரிவு சாத

லிமைப்பிடைப் படாத தொன்றாற்

கயற்கணி னளவுங் கொள்ளார்

கவற்சியுட் கவற்சி கொண்டார்

செயற்கையம் பிறவி நச்சுக்

கடலகத் தழுந்து கின்றார்.

சீவகசிந்தாமணி 1167,509,269,1391, 1393

பிறந்தவர் இறப்பர் இறந்தவர் பிறப்பர்

717. பிறங்கின கெடுங்கள் யாவும் புணர்ந்தவர் பிரிவர் பேசின் இறங்குபு வீழு மேலா லோங்கின வெண்ணில் யோனி பிறந்தவர் சாவர் செத்தார் பிறப்பவே யென்ன நோக்கிக் கறங்கிசை வண்டு பாடுங் கோதைநீ கவல லென்றாள்.

பிறவியை எண்ணிற் பெருங்கடல் மணலே

718. தொல்லைநம் பிறவி யெண்ணிற்

றொடுகடல் மணலு மாற்றா

எல்லைய வவற்று ளெல்லாம்

ஏதிலம் பிறந்து நீங்கிச்

செல்லுமக் கதிகள் தம்முட்

சேரலஞ் சேர்ந்து நின்ற

இல்லினு ளிரண்டு நாளைச்

சுற்றமே யிரங்கல் வேண்டா.