உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/266

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புறத்திரட்டு

துன்பினை இன்பாய்த் துணிவதே அரிது

அன்பினி னவலித் தாற்றா

தழுவது மெளிது நங்கள்

719.

என்பினி னாவி சோர

விறுவது மெளிது சேர்ந்த

720.

721.

1. செறிதிரைப்.

துன்பத்தாற் றுகைக்கப் பட்டார்

துகைத்தவத் துன்பந் தாங்கி

இன்பமென் றிருத்தல் போலு

மரியதிவ் வுலகி னென்றாள்.

நீர்க்குமிழ் போலும் நிலையிலா வாழ்வு

மன்னுநீர் மொக்கு ளொக்கு

மன்னுயி ரிளமை யின்பம்

மின்னினொத் திறக்குஞ் செல்வம்

வெயிலுறு பனியி னீங்கும்

இன்னிசை யிரங்கு நல்யா

ழிசையினு மினிய சொல்லாய்

அன்னதான் வினையி னாக்க

மழுங்குவ தென்னை யென்றாள்.

உற்று நோக்கினும் உயிர்ப்போக் குணரார்

தேன்சென்ற நெறியுந் தெண்ணீர்ச்

'சிறுதிரைப் போர்வை போர்த்து

மீன்சென்ற நெறியும் போல

விழித்திமைப் பவர்க்குந் தோன்றா

மான்சென்ற நோக்கின் மாதே

மாய்ந்துபோ மக்கள் யாக்கை

ஊன்சென்று தேயச் சிந்தித்

துகுவதோ தகுவ தென்றாள்.

249

-சீவகசிந்தாமணி 1535, 270, 1392, 1537, 1390