உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/267

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

250

இளங்குமரனார் தமிழ் வளம் 17

விதியினை விலக்கார் வெளிய நீரார்

722. மதியினை மலரச் சூழ்ந்து

வருந்தித்தாம் படைக்கப் பட்ட

நிதியினை நுகர்வ லென்று

நினைந்தினி திருந்த போழ்தில்

பதியினைக் கலக்கிச் சென்று

விதியினை விலக்க மாட்டார்

பறித்துயிர் பிறர்க்கு நீட்டும்

மெலிபவே வெளிய நீரார்.

அறிவ தறிவார் அழுங்கார் உவவார்

723. மறிப மறியு மலிர்ப மலிரும்

724.

பெறுப பெறும்பெற் றிழப்ப விழக்கும்

அறிவ தறிவா ரழுங்கா ருவவார்

உறுவ துறுமென் றுரைப்பது நன்று.

பாரிப்ப வெல்லாம் வினையின் பயனே

-சூளாமணி 668

வேரிக் கமழ்தா ரரசன்விடு கென்ற போழ்துந் 'தாரித்த லாகா வகையாற்கொலை சூழ்ந்த பின்னும் பூரித்தல் வாடுதலென் றிவற்றாற்பொலி வின்றி நின்றான் பாரித்த தெல்லாம் வினையின்பய னென்ன வல்லான்.

-குண்டலகேசி 18, 19

இன்னல் எய்தினால் எவையும் செய்வர்

725. எய்த வின்னல் வந்த போழ்தில் யாவ ரேனும் யாவையுஞ்

செய்ய வல்ல ரென்று கொள்க சேணெ றிக்க ணேகிட மைய கண்ணி செய்ய பாதம் வல்ல வாய மற்றிவன் கைக ளின்று பன்ன சாலை கட்ட வல்ல வாயவே.

1. தாரிக்க. 725. இப்பாடல் இராமாயணத்தில் காணப்பெறவில்லை.

-

இராமாயணம்