உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/270

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புறத்திரட்டு

அறிவர் துணையால் ஆட்சியைத் தாங்குக

733. வீங்குநீ ருலகங் காக்கும் விழுநுக மொருவ னாலே

253

தாங்கலாந் தகைமைத் தன்று தளையவிழ்த தயங்கு தார்ச்சீர்ப் பாங்கலார் பணியச் சூழும் நூல்வலார் பாக மாகப்

பூங்குலா மலங்கல் மாலைப் புரவலன் பொறுக்கு மன்றே.

ஆட்சிச் சிறப்பை அமைச்சால் அறிக

734. எடுத்தன னிலங்கு சாதி யெழிலொடு திகழு மேனும் அடுத்தன நிறத்த தாகு மணிகிளர் பளிங்கு போல

வடுத்தவ மலர்ந்து நுண்ணூல் மதியவர் வினையின் மாட்சி கொடுத்தவா நிலைமை மன்னர் குணங்களாக் கொள்ப வன்றே. அறிவரை நாடி அரசு செலுத்துக

735. தண்ணிய தடத்தவே யெனினுந் தாமரை விண்ணியல் கதிரினால் விரியும் வேந்தரும் புண்ணியப் பொதும்பரே 'பொருந்தி வைகினுங் கண்ணிய புலவரா லலர்தல் காண்டுமே. அனைத்துச் சிறப்பும் அமைச்சர் மேலதே

736. சுற்றுநின் றெரியுஞ் செம்பொன்

2

மணிமுடி சுடரச் சூடி

வெற்றவெண் குடையி னீழல்

வேந்தன்வீற் றிருக்கு மேனும்

மற்றவன் மனமுங் கண்ணும்

வாழ்க்கையும் வலியுஞ் சால்பும்

அற்றமில் புகழுங் கோலு

மாபவ ரமைச்ச ரன்றே.

கற்றவர் வழியில் கடமை ஆற்றுக

737. அற்றமின் றுலகங் காக்கு மருந்தொழில் புரிந்து நின்றால் கற்றவர் பொழிந்த வாறு கழிப்பது கடன தாகும்

1. புரிந்து.

2. சூட்டி.