உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/271

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

254

1.கடிவ.

இளங்குமரனார் தமிழ் வளம் 17

மற்றவர்க் குறுதி நோக்கி வருபழி வழிகள் தூரச் செற்றவர்ச் செகுக்குஞ் சூழ்ச்சி தெருண்டவர் 'கடவ தன்றே.

சிறந்தன தேர்ந்து செய்பவன் அமைச்சன்

738. செறிந்தவர் தெளிந்த நூலாற் சிறந்த னதெளிந்து சொன்னால் அறிந்தவை யமர்ந்து செய்யு மமைதியா னரச னாவான் செறிந்தவர் தெளிந்த நூலாற் சிறந்தன தெரிந்து கூறி அறிந்தவை யாற்ற கிற்கு மமைதியா னமைச்ச னாவான்.

சூழ்வான் சூழ்ச்சியாற் சுடரும் அரசு

2

739. சுந்தரச் சுரும்புண் கண்ணிச் சூழ்கழ லரசர் வாழ்க்கை தந்திர மறிந்து சூழ்வான் சூழ்ச்சிய தமையல் வேண்டும் மந்திரம் வழுவு மாயின் வாளெயிற் றரவு காய்ந்து தந்திரந் தப்பி னாற்போற் றன்னையே தபுக்கு மன்றே.

740.

நூலமர் நுழைவொடு நுழைந்து செல்லுக

மாலமர் நெடுங்கடல் மதலை பற்றிலாக் காலமைந் தொழுகுமேற் கரையுங் காணுமே நூலமர் நுழைவொடு நுழைந்து செல்லுமேல் வேலவ ரொழுக்கமும் வேலை காணுமே.

-சூளாமணி 251,233, 245, 253, 234, 244, 246, 247, 252, 235

முள்ளை முள்ளால் கிள்ளி எறிக

741. நீதி யாலறுத் தந்நிதி யீட்டுதல் ஆதி யாய வரும்பகை நாட்டுதல் மோதி முள்ளொடு 3முட்பகை கண்டிடல் பேது செய்து பிளந்திடல் பெட்டதே.

-சீவகசிந்தாமணி 1920

2. சூழ்ச்சிசார்ந். 3. முட்புடை கொண்டிடல்.