உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/272

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புறத்திரட்டு

அறிவனே எனினும் அறிவரோ டாய்க 742. ஆயிரங் கதிருடை யருக்கன் பாம்பினால் ஆயிரங் கதிரொடு 'மழுங்கக் கண்டுகொல் ஆயிரங் கண்ணுடை யமரர் கோனுமொ ராயிர மமைச்சர்சொல் வழியி னாயதே.

உற்றதால் உறுவ தறிவார் அமைச்சர்

2

255

-சாந்தி புராணம்

743. உற்றது கொண்டு மேல்வந் துறுபொரு ளுணர்வா ருற்றால் மற்றது வினையின் வந்த தாயினு மாற்ற லாற்றும் பெற்றியர் பிறப்பின் மேன்மைப் பெரியவ ரரிய நூலுங் கற்றவர் மான நோக்கிற் கவரிமா வனைய நீரார்.

ஒல்லையில் நல்லவை உதவுவார் அமைச்சர்

744. நல்லவுந் தீயவு நாடி நாயகற்

கெல்லையின் மருத்துவ ரியல்பி னெண்ணுவார் ஒல்லைவந் துறுவன வுற்ற பெற்றியிற் றொல்லைநல் வினையென வுதவுஞ் சூழ்ச்சியார்.

அறநெறி உரைக்க அஞ்சார் அமைச்சர்

745. தம்முயிர்க் குறுதி யெண்ணார்

தலைமகன் வெகுண்ட போதும்

வெம்மையைத் தாங்கி நீதி

விடாதுநின் றுரைக்கு மெய்யர்

செம்மையிற் றிறம்பல் செல்லாத்

தேற்றத்தார் தெரியுங் கால

மும்மையு முணர வல்லா

ரொருமையே மொழியு நீரார்.

-இராமா, அயோத், 9, 12, 11

1. (ம்) விழுங்கக்.

2. ளுணருங்கேளார்.

3. (ம்) வீரர்.