உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/273

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

256

இளங்குமரனார் தமிழ் வளம் 17

72. சொல் வன்மை

(“எண்ணிய எண்ணம் முற்றும் பெறுமாறு சொற்களைத் திறம்படச் சொல்லும் ஆற்றல்" - கா.சு.

இ.பெ.அ: திருக். 65. நீதிக். 24.)

தோற்பன கொண்டு தொல்லவை போகேல் 746. கேட்பாரை நாடிக் கிளக்கப் படும்பொருட்கண் வேட்கை யறிந்துரைப்பர் வித்தகர் - வேட்கையால் வண்டு வழிபடரும் வாட்கண்ணாய் தோற்பன கொண்டு புகாஅ ரவை.

ஆய்ந்துணர் அமைச்சரை ஆய்ந்து கொள்க 747. நல்லவுந் தீயவு நாடிப் பிறருரைக்கும் நல்ல பிறவு முணர்வாரைக் கட்டுரையின் வல்லிதி னாடி வலிப்பதே புல்லத்தைப் புல்லம் புறம்புல்லு மாறு.

முழந்தாள் கிழிந்தானை மூக்குப் பொதிதல் 748. துன்னி யிருவர் தொடங்கிய மாற்றத்திற் பின்னை யுரைக்கப் படற்பாலான் - முன்னி மொழிந்தால் மொழியறியான் கூறல் முழந்தாள் கிழிந்தானை மூக்குப் பொதிவு

749.

இடையிடை மறித்தே இயம்புதல் ஒழிக

ஒருவ ருரைப்ப வுரைத்தலா லதுகொண்

டிருவரா வாரும் எதிர்மொழியற் பாலா பெருவரை நாட சிறிதேனு மின்னா திருவ ருடனாடல் நாய்

சொல்லைச் சொல்லால் வெல்லுவ தாற்றல்

750. மாற்றத்தை மாற்ற முடைத்தலான் மற்றவர்க் காற்றும் வகையா னவர்க்களைய வேண்டுமே