உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/274

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

751.

புறத்திரட்டு

வேற்றுமை யார்க்குமுண் டாதலா னாற்றுவான்

நூற்றுவரைக் கொன்று விடும்.

257

பழமொழி 17, 261, 19, 18, 307

செவ்வி யறிந்து செப்புக திறமாய்

விரைந்துரையார் மேன்மே லுரையார்பொய் யாய பரந்துரையார் பாரித் துரையார் - 'ஒருங்கெனைத்துஞ் சில்லெழுத்தி னானே பொருளடங்கக் காலத்தாற் சொல்லுக செவ்வி யறிந்து.

-ஆசாரக்கோவை 76

சொல்லின் வனப்பே சொல்லரும் வனப்பு

752. மயிர்வனப்புங் கேண்கவரு மார்பின் வனப்பும் உகிர்வனப்புங் காதின் வனப்புஞ் - செயிர்தீர்ந்த பல்லீன் வனப்பும் வனப்பல்ல நூற்கியைந்த சொல்லின் வனப்பே வனப்பு.

-சிறுபஞ்சமூலம் 37

எளியவை நான்கும் அரியவை நான்கும்

3

753. சாவ தெளிதரிது சான்றாண்மை நல்லது மேவ லெளிதரிது மெய்போற்றல் - ஆவதன்கண் சேற லெளிது நிலையரிது தெள்ளியரா

வேற லெளிதரிது சொல்.

கற்றுத் தேர்ந்தவர் சொற்றிற மாண்பு

-ஏலாதி 39

754. நுண்மொழி நோக்கிப் பொருள்கொளலும் நூற்கேலா வெண்மொழி வேண்டினுஞ் சொல்லாமை - நன்மொழியைச் சிற்றின மல்லார்கட் சொல்லலு மிம்மூன்றும் கற்றறிந்தார் பூண்ட கடன்.

1. ஒருங்கனைத்துஞ்

திரிகடுகம் 32

2. கண்வவ்வு.

3. மெய்யோர்தல்.