உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/275

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

258

இளங்குமரனார் தமிழ் வளம் 17

அகலங் காட்டுதல் ஆருரை மாண்பு

755. பொழிப்பகலம் நுட்பநூ லெச்சமிந் நான்கிற் கொழித்தகலங் காட்டாதார் சொற்கள் - பழிப்பில் நிரையாமா 'சேக்கு நெடுங்குன்ற நாட

உரையாமோ நூலிற்கு நன்கு.

-நாலடியார் 319

சொல்லிற் கழகு வெல்லுமா றுரைத்தல்

756. சொல்லுங்காற் சொல்லின் பயன்காணுந் தான்பிறர் சொல்லிய சொல்லை வெலச்சொல்லும் - பல்லார் பழித்தசொற் றீண்மடாற் சொல்லும் - விழுத்தக்க கேட்டார்க் கினியவாச் சொல்வானேற் - பூக்குழலாய் புல்லலி னூட லினிது.

-தகடூர் யாத்திரை

கா.சு.

1. சேர்க்கு.

73. வினைசெயல்வகை

(“மனஉறுதி உடையவர்கள். செயல்களைச் செய்யும் திறம்”-

இ. பெ.அ: திருக். 68.)

பகையொழிப் பதற்குப் பண்புறு வழிகள்

757. மறையா தினிதுரைத்தல் மாண்பொரு ளீதல் அறையா னகப்படுத்துக் கோடல் - முறையால் நடுவணாச் சென்றவரை நன்கெறித லல்லால் ஓடியெறியத் தீராப் பகை.

பகையுட் பகையைப் பகுத்துக் கொள்க 758. தெள்ளி யுணருந் திறனுடையார் தம்பகைக் குள்வாழ் பகையைப் பெறுத லுறுதியே

கள்ளினாற் கள்ளறுத்தல் காண்டும் அதுவன்றோ முள்ளினால் முட்களையு மாறு.