உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/277

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

260

இளங்குமரனார் தமிழ் வளம் 17

இன்னா தவற்றுள் இன்னா கொடுங்கோல் 764. சிறையில் கரும்பினைக் காத்தோம்ப லின்னா 'உறைசேர் பழங்கூரை சேர்ந்தொழுக லின்னா முறையின்றி யாளு மரசின்னா வின்னா

மறையின்றிச் செய்யும் வினை.

இன்னா நாற்பது 6

சூழ்வாரைச் சூழல் வாழ்வார் வழக்கு

765. சூதினா னாகத்தன் றோள்வலியாற் றானாக யாதினா னாயினும்வந் தெய்துமேல் - தீதெண்ணிச் சூழ்வாரைத் தாமுன்னஞ் சூழ்வதே மன்னராய் வாழ்வாருக் குள்ள வழக்கு.

வலியவர் தொடர்பு வலிமையில் வலிமை 766. நலிவில் குன்றொடு காடுறை நன்பொருட் புலிய னார்மகட் கோடலும் பூமிமேல் வலியின் மிக்கவர் தம்மகட் கோடலும் நிலைகொள் மன்னர் வழக்கென நேர்பவே.

-பாரதம்

74. தூது

சீவகசிந்தாமணி 1919

(“மாற்றரசர் மாட்டுச் சந்து செய்யும் அமாத்தியர் இலக்கணம் கூறுதல்” - மணக் (அமாத்தியர் - அமைச்சர். இவண் தூதர்)

1. புரைசேர்.

பெ.அ: திருக். 69)

ஆற்றல் பலவும் அமைந்தவர் தூதர்

767. மாண்டமைந்தா ராய்ந்த மதிவனப்பே வன்கண்மை யாண்டமைந்த கல்வியே சொல்லாற்றால் - பூண்டமைந்த கால மறிதல் கருதுங்காற் றூதுவர்க்கு

ஞால மறிந்த புகழ்.

-ஏலாதி 26